கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நந்தட்டி பகுதியில் தொடர்ச்சியாக 2 வேகத்தடைகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அந்த வேகத்தடைகள் இருப்பதே வாகன ஓட்டிகளின் கண்ணுக்கு தெரிவது இல்லை. இதுதான் விபத்துகள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வேகத்தடைகள் இருப்பதை சுட்டிக்காட்டும் அடையாள குறியீடுகளை வரைய வேண்டும் அல்லது வேகத்தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.