சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலை மிகவும் மோசமாக இருந்தது. தற்போது அந்த சாலையில் உள்ள அரசு பள்ளி வரை சாலையை சீரமைத்து விட்டு, மற்ற இடங்களில் அப்படியே போடப்பட்டுள்ளதால் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.