காரியாபட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் அந்த சாலையில் அன்றாடம் பயணம் செய்யும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேதமடைந்த இந்த சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதி சாலையை சீரமைப்பார்களா?