மானூர் தாலுகா தடியம்பட்டி ஊராட்சி சொக்கநாச்சியார்புரத்தில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தோண்டிய சாலையை இன்னும் சீரமைக்கவில்லை. இதனால் சாலை உருக்குலைந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.