மதுரை வடக்கு கோ.புதூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சிரமமடைகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.