அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமம் காலனி தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் மயான சாலை மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும், சாலையின் இருபுறமும் சீமைக் கருவேல முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், இறந்தவர்களின் உடல்களை இறுதிச் சடங்கிற்காக எடுத்துச் செல்லும்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த மயான சாலையைச் சீரமைத்து, முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.