அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அரங்கோட்டை கிராமத்தில் உள்ள பொன்னாற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலம் மிகவும் மோசமடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் அந்தப் பாலத்தின் வழியே விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகளும், பொதுமக்களும் தினமும் உயிருக்கு அஞ்சியபடி பயத்துடனே கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப் பாலத்தைப் புதுப்பித்துத் தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.