வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-06-28 12:08 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இறையூர் கிராமத்திற்குச் செல்லும் வழிப் பகுதியில், பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வழியே செல்லும் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தச் சந்திப்பில் வேகத்தடை அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்