பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கோவில்பாளையம் கிராமத்தில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டு, நீண்ட நாட்களாகப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதோடு, முதியவர்களும், குழந்தைகளும் சாலையில் நடக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, விபத்துகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதியில் நின்ற சாலைப் பணியை விரைந்து முடித்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.