தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2026-06-21 16:41 GMT

மதுரை மாவட்டம் குமாரம் சரவணா டவுன்ஷிப் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் மழை பெய்யும் காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சகதி காடாக காட்சியளிக்கின்றது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு சிலர் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதிகளில்  புதிய தார்ச்சாலை அமைத்து தர அதிகாரிகள் விரைந்து முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்