பந்தலூர் அருகே உள்ள பந்தப்பிளாவில் இருந்து குன்றில்கடவு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.