சேலம் பொன்னமாபேட்டையில் இருந்து செல்லும் வீராணம் பிரதான சாலை ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. பொன்னமாபேட்டையின் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து புத்துமாரியம்மன் கோவில் தெரு வரை சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் பரவியுள்ளதால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதிமக்களும், வாகனஓட்டிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.