சேந்தமங்கலம்-சோமேஸ்வரர் ஓடை வழியாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு தார் சாலை செல்கிறது. இந்தநிலையில், அந்த சாலையில் அழுகிய மாம்பழங்களை சிலர் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மாம்பழங்களால் வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. இது சாலையா? குப்பை கூடமா? என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே அழுகிய மாம்பழங்களை குப்பை தொட்டிகளில் கொட்டுவதற்கு பொதுமக்கள் முன் வர வேண்டும்.