சேலம் லீபஜாரில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களும், சரக்கு வாகனங்களும் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளப்பட்டி மெயின் ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.