சாலையில் பறக்கவிடும் வண்ண காகிதங்களால் விபத்து அபாயம்

Update: 2026-06-14 14:11 GMT

திருமணம், சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழா காலங்களில் எந்திரத்தின் மூலம் வண்ண காகிதங்களை பறக்கவிடும் கலாசாரம் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதுபோல கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள ஒரு கோவில் நிகழ்ச்சியில் சமீபத்தில் எந்திரத்தின் மூலம் வண்ணத்துண்டு காகிதங்களை பிரதான சாலையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பறக்க விட்டனர். தற்போது வண்ண காகிதங்கள் சாலை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்துகளை தவிர்க்க இதுபோன்று சாலையில் வண்ண காகிதங்களை பறக்கவிடுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்