ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2026-06-14 13:53 GMT

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் மெணசி ஊராட்சியில் விழுதிப்பட்டி, மெணசி, பாஞ்சாலி நகர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு சேலம், அரூர் செல்ல மெணசி-தோளனூர் சாலையை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாய்க்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்