புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி தெற்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கிய பொதுப்பாதையைத் தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளிச் செல்லும் மாணவர்கள் தினமும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துப் பாதிப்பைத் தவிர்க்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.