சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-06-07 13:08 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள கைலாசபுரம் சாலை முதல் வீரபோகம் கிராமம் வரை உள்ள தார்சாலை கடந்த சில வருடங்களாகவே குண்டும், குழியுமாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அவசர காலங்களில் கூட குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் வயதான முதியவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்