சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள தனசேகரன் குறுக்கு தெருவில் பெயர் பலகை இல்லை. அந்த பகுதியில் உள்ள சுவரில் பெயர் எழுதப்பட்டுள்ளது. இதனால் பெயர் பலகை எளிதில் அழிந்துவிடுகிறது. பெயர் பலகை இல்லாததால் இந்த பகுதிக்கு வரும் வெளி நபர்கள், தபால் ஊழியர்கள், டெலிவரி ஊழியர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகை அமைக்கவேண்டும்.