புகார் எதிரொலி

Update: 2026-05-31 12:31 GMT

சென்னை கீழ்ப்பாக்கம், டெய்லர்ஸ் சாலையில் மரம் ஒன்று ஆபத்தான முறையில் சாலையை ஆக்கிரமித்து இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையை ஆக்கிரமித்த மரத்தை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்