கோவை ராம்நகர் சத்யமூர்த்தி சாலையில் வங்கி அருகில் சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால் வேகத்தடை எதுவும் இல்லை. அருகில் பள்ளி, கோவில் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.