பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தென்னகோணத்தில் இருந்து பெருமத்தூர் வரை செல்லும் சாலை சேதமடைந்ததை தொடர்ந்து, அதை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நீண்ட நாட்களான நிலையில், இன்னும் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.