பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் தினமும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அவர்கள் அகரம்சீகூர்-அரியலூர் சாலையில் அடிக்கடி பைக்கில் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அவதி அடைவதுடன், விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து ரேஸிங்கில் ஈடுபடுவர்களை கண்டிக்க வேண்டும்.