பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரில் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோவிலின் அருகே சாலையில் உள்ள வளைவு மிகவும் ஆபத்தான வகையில் உள்ளது. இந்த வளைவில் திரும்பும்போது எதிரே வரும் வாகனம் தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த வளைவில் எதிரே வரும் வாகனங்களை பார்க்கும் வகையில் பிரதிபலிப்பான் கண்ணாடி அமைக்கவும், எச்சரிக்கை விளக்கு வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.