வெள்ளை வர்ணம் பூச வேண்டும்

Update: 2026-05-31 10:45 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கிருஷ்ணாபுரத்தில் இருந்து அரும்பாவூர் செல்லும் 10 கிலோமீட்டர் தூரமுள்ள சாலையில் 14 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகளில் பூசப்பட்டிருந்த வெள்ளை வர்ணம் தற்போது அழிந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். குறிப்பாக இந்த சாலையில் புதிதாக பயணம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் - அரும்பாவூர் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்