‘தினத்தந்ததி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-05-31 10:45 GMT

கரூர் மாவட்டம் காதப்பாறை ஊராட்சி வாங்கப்பாளையம், முத்துநகரில் உள்ள 5 தார்சாலைகள் மிகவும் மோசமாகவும், குண்டு, குழியுமாக இருந்தது. இதையடுத்து இந்த சாலைகளை சீரமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில், பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைப்பணிகளை விரைந்து முடித்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்