விருதுகர் மாவட்டம் சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதி என்.ஜி.ஓ. காலனி பாரதிநகர் வழி செல்லும் சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியே பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையால் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட வழித்தட சாலையை விரைந்து சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.