ஓமலூர் அருகே புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு முதல் 4-வது வார்டு வரை தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2 மாதங்கள் ஆகியும் அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறாமல் பாதியிலேயே போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தார்சாலை பணிகளை முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?