சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை மிகவும் சேதமடைந்து இருந்தது. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சேதடைந்த நடைபாதையை சீரமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.