கரூர் மாவட்டம் நொய்யல் முதல் மரவாபாளையம், திருக்காடுதுறை, தளாவாபாளையம் வழியாக வாங்கல் வரை புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் இடது கரையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மண்சாலையும், சில இடங்களில் தார்சாலையும் போடப்பட்டது. இந்த சாலைகள் வழியாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் மண்சாலையின் இருபுறமும் நாணல் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் முளைத்து சாலையை ஆக்கிரமித்துள்ளன. எனவே இந்த செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.