சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

Update: 2026-05-17 13:52 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா தளவாய்புரம் ஊராட்சி காமராஜ் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கும் பணிக்காக பழைய தார் சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் சாலை கரடு முரடாக காட்சியளிப்பதால் இதில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்