சேலம் சந்தைப்பேட்டை ரோட்டில் இருந்து செவ்வாய்பேட்டை மயானத்திற்கு வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதியாகும். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழைநீர் அந்த பள்ளத்தில் தேங்கியுள்ளது. இதனால் பள்ளம் இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் நிற்கிறது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.