சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள பிலிம் பள்ளி எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்ககாக சாலை உடைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை வேலை முடிவுபெறாமல் சாலை பள்ளமாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் தேங்குகிறது. இந்த பகுதியில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதால் பாதசாரிகள் மூக்கினை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.