சேதமடைந்த நடைபாதை

Update: 2026-05-17 12:07 GMT

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதை மிகவும் சேதமடைந்து உள்ளது. நடைபாதையின் பல இடங்களில் உடைந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும் காணப்படுகிறது. இதனால் இதில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நடைபாதையை சீரமைத்து தருவார்களாக? என பாதசாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்