பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம் சீகூரில் இருந்து திருமாந்துறை வரை செல்லும் சாலையில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வேகத்தடைகளில் பூசப்பட்ட வெள்ளை வர்ணம் தற்போது முற்றிலும் அழிந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.