உத்தமபாளையம் கோட்டைமேடு தெரு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் சாலையில் இருந்த வேகத்தடைகள் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி நடந்த தேரோட்டத்தின் போது அகற்றப்பட்டன. ஆனால் அதன் பிறகு அங்கு வேகத்தடைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. எனவே அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.