மணலூர்பேட்டை பேரூராட்சியில் 15-வது வார்டு ஜம்பை தர்காவுக்கு செல்ல சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. சாலையின் நடுவே ஆங்காங்கே சிலர் பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் அங்கு புதிய சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.