வெண்ணந்தூரிலிருந்து மல்லூர் செல்லும் சாலை ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே அபாயகரமான வளைவு உள்ளது. இந்த வளைவில் அடிக்கடி விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களை வேகம் குறைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.