சின்னமனூர் சங்கிலித்தேவன் குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அவை உரிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நடைபயிற்சி செய்வதற்காக அங்கு வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த இருக்கைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.