அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் இருந்து முத்துசேர்வாமடம் வழியாக செல்லும் இளையபெருமாள் நல்லூர் ஊர் வரை உள்ள சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை தேவை இல்லாத இடத்தில் வேகத்தடைகள் உள்ளன. சுமார் 23 வேகத்தடைகள் உள்ளதால், அவசர தேவைகளுக்கு உடனடியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேவை இல்லாத வேகத்தடைகளை அகற்ற வேண்டும்.