குண்டும், குழியுமான கிரிவலப் பாதை

Update: 2026-04-26 13:28 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று வருவது வழக்கம். கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிரிவல பாதையில் உள்ள சாலை முட்புதர்கள் அண்டியும், பாதைகள் குண்டும், குழியுமாகவும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும் கிடப்பதால், பக்தர்கள் நடந்து வரும்போது கால்களில் ஜல்லிகள் குத்தி காயம் ஏற்ப்படுகின்றன. இதனால் அவர்கள் கடும் அவதியடைந்த வருகின்றனர். எனவே கிரிவலப் பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்