கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-கெலமங்கலம் நெடுஞ்சாலையில் மஞ்சலகிரி கூட்டு ரோடு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் விபத்துகளில் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதனால் இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அந்த பகுதியில் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அவசியம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.