வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-03-08 11:52 GMT

கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிச்சி மெயின் சாலை மிகவும் ஆபத்தான வளைவு பாதையாக உள்ளது. இவ்வழியாக தான் கரூர் முதல் வேலூர் வரை செல்லும் நகர பஸ்கள், கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கின்றன. இந்நிலையில் வாகன ஓட்டிகளுக்கு எதிர்புறம் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் உள்ளது. சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் ஹாரன் அடிக்காமல் வருவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகளை தடுக்க இருபுறமும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்