பொதுமக்கள் அவதி

Update: 2026-03-08 10:47 GMT

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சியில் உள்ள சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் 10-வது வார்டுக்கு உட்பட்ட மஞ்சம்பட்டியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாமல் உள்ளது. மேலும் மஞ்சம்பட்டி பகுதியில் வாரத்துக்கு 2 முறை காவிரி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருவதால், இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தினமும் காவிரி குடிநீர் வினியோகம் செய்திடவும், தெருவிளக்கு அமைத்திடவும், சாலையை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்