அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டியில் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தெற்கு புறத்தில் முட்டுவாஞ்சேரி சாலை உள்ளது. இந்த வழியாக வி.கைகாட்டியில் இயங்கும் தனியார் சிமெண்ட் ஆலைக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் மு.புத்தூர் கிராமத்திலுள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து ஜிப்சம் எடுத்துக்கொண்டு வேகமாக செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்கும் விதமாக புறக்காவல் நிலையத்தின் மேற்கு புறத்தில் சென்டர் மீடியன் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது இந்த வேகத்தடை சிதிலமடைந்து உள்ளநிலையில், இவ்வழியே செல்லும் கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சிதிலமடைந்துள்ள வேகத்தடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.