கரூர் மாவட்டம் புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் தார்சாலை மிகவும் மோசமான நிலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குகிறது. மேலும் மாணவிகள் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வரும்போது, பள்ளங்களில் வாகனங்களை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை மாற்றி புதிய தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.