தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில், கோவிந்தாபுரம் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிரில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில், ஒளிரும் பட்டைகள் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில், விபத்து ஏற்படுகிறது. எனேவே வேகத்தடையில், ஒளிரும் பட்டைகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.