சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-03-01 11:09 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் இருந்து திருவெள்ளறை செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்