சோளங்காபாளையம் நால்ரோட்டில் இருந்து பாசூர் செல்லும் சாலையானது மிகவும் குறுகலான பாதையாக உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை. மிகவும் ஆபத்தான நிலையில் கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த சாலை திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி செல்லும் முக்கிய பாதையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் பள்ளிக்கூடமும் காணப்படுகிறது. குறுகலான இந்த சாலையை பாசூர் வரை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?