கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி நகருக்குள் வரக்கூடிய சர்வீஸ் சாலை முழுவதும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக மேம்பாலத்தையெட்டி சூளகிரி பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் திரும்பும் இடத்தில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். சாலை பல மாதங்களாக சேதமடைந்துள்ள நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் சூளகிரி மேம்பாலம் அருகில் சேதமடைந்த சர்வீஸ் சாலையை சீரமைப்பார்களா?